கண்விழித்து பல்துலக்க –
சோம்பலுடன் தேநீர் குடிக்க –
குழந்தையுடன் குதூகளிக்க –
தொலைக்காட்சி கண்டுகளிக்க –
நிம்மதியாய் உணவருந்த –
காய்ந்த துணி மடித்தடுக்க –
காதலுடன் கதைகள்பேச –
மணிக்கணக்காய் அலைபேச –
என் வீட்டில் அமர்ந்திருக்கும் நீள் சாய்விருக்கையே!
முழு நாளின் முக்கால் நேரம் என்னைத் தாங்கும் மென் இருகையே!
சிலநேரம் மெத்தைக்கு நகல் இருக்கையே!
உறவாகவே உன்னை ஏற்றேன் சுமைதாங்கியே!
பூமலர்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)