கள்ளம் கபடமற்ற
சிரிப்பை உடைய
இனிய குழந்தையே
உன் உடல் வெப்பம்
தணிக்க
உன்தாயின் பூப்போன்ற கைகள்
உன் பஞ்சு போன்ற
உடலில் பட்டு
தண்ணீரும் பன்னீராய்
உன் மேனி தழுவியதே
அது மட்டுமா
சவர்க்கார
நுரைகளும்
குமிழ் குமிழ்லாக
பறந்தனவே
அழகிய குழந்தையே
இக்குளியல்
நீடித்தால்
கங்கையும்
கரை புரள்வாள்
உன் மேனி தொட்டுவிட
உன் தாயும்
பரவசம் அடைவாள்
நீ ஆனந்த மழையில்
நனைவதை பார்த்து….
M. W Kandeepan ✍️
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
