காட்டில் வாழ்ந்து போர்
அடித்து விட்டது என ஊருக்குள்ளே போனால்…
அங்கே என்னை விட மனித உருவில் இருக்கும் பெரிய விலங்குகள் உலா வருகின்றனர்…
அதை விட நான் அவர்களோடு
பழக நினைத்தால் அந்த ஐந்தறிவு விலங்குகள் என்னை
புரிந்து கொள்ளாமல் துரத்தி
விடுகிறார்கள்….
போதும் டா சாமி உங்க நாட்டை விட என் காடு சிறந்தது இப்போ நான் ஓய்வெடுக்கிறேன் இந்த மரக்கிளையில்…
உங்க மனித இனத்தை விட இங்கே கூடு கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும் பறவைகள் எவ்வளவோ மேல்….
(மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
