தனிமை வானில்
சிறகில்லாமல்
பறந்த என்னை
மணமெனும்
கை விலங்கை பூட்டி
சிறைபடுத்தி
ஏன் வஞ்சிக்கிறாய்…?
இணை பிரியாத
காதலர்களாக
பிரபஞ்சத்தை
வலம் வரலாம் என்ற
என் காதல் திட்டம்
உடைந்த கண்ணாடி
வில்லைகளாக
சிதறி கிடக்கிறதே…
கானலாக்கிடாமல்
என் திட்டத்தில்
கைகோர்த்து கொள்…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
