காதல் பயணம்
விண்ணெங்கும் முகில்கள் பஞ்சுபொதியாய்
வெண்மையும் கருமையாய்
அடுத்த மழை முத்தத்திற்கு தயாராகி அசைந்தாட…
பகலவனும் நிலவனும்
மழையின் ஸ்பரிசத்தால்
ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி ஆடிட…
பூவுலகை முத்தமிட்ட
மழையின்
எண்ணற்ற துளிகள்
வெள்ள நதியாக பாய்ந்தோட…
அசைந்தோடும் கொண்டல்களுக்கு போட்டியாக
தொடரியின் நீராவி இன்ஜினின்
புகைமூட்டம் விண்ணில் மோதிட…
ஜன்னலோர இருக்கையின் தயவில்
பச்சை பசெல் பசுந்தாவரங்கள்
எனை கடந்து வேகமாக சென்றிட…
தொடருந்தின் தொடர்பெட்டிகளாய்
உன்னுடனான இனிய நினைவுகளை
அடுக்கடுக்காக ரசித்தபடி…
தொலை தூரம் ஒன்றாக பயணித்து வரும் தண்டவாளத்தில்
தொடருந்து காதல் பயணமாய்
தொலைவிலிருக்கும்
உனை வந்து சேர்ந்திட காதல் ஒளி வீசி வருகிறேன் அன்பனே…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)