காற்று வாங்கவும் ஓய்வாக இருக்கவும் நான் கடற்கரைக்கு
வந்தேன்…
அங்கே சிறுவர், சிறுமி. யுவதிகள், இளைஞர்கள் என பந்து விளையாடி கொண்டு இருந்தனர்…
அதை ரசித்து பார்த்த என் நினைவுகளில் என்னவள் வந்தாள்…
நானும் அவளும் இப்படி தான் எங்க இளமை பருவத்தை கழித்தோம் …
காதலர்களாக இருந்த நாங்கள் தம்பதிகளாக மாறி பெற்றோராக மாறினோம்
இப்போ தாத்தா, பாட்டி…
நிறைவான வாழ்க்கை தான் ஆனால் எனக்கு நிறைவை தரவில்லை…
ஆம் என் இனியவள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா
என்னோடு கடைசி வரை கை கோர்ப்பேன் என்றவள்…
போராசை பட்டு எனக்கு முன் மஞ்சள் குங்குமத்தோடு போய் விட்டாள்…
அவள் என் அருகே இல்லை அவள் நினைவுகள் இந்த பந்து போல என்னுளே அமுக்கி கொண்டு இருக்கிறது…
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)