காலை முதல் மாலை வரை
பயணித்துக் களைப்படைந்தேன்!
அல்லிக்குளம் தாண்டிச்செல்ல
படித்துறைதோறும் பயணப்பட்டேன்
ஏணியும் தோணியும் என்றுமே
ஓய்வதில்லை!
ஏற்றிவிடும் ஏணி ஒருநாளும்
உயரத்தை அடைவதில்லை!
கரை சேரும் மனிதக் கூட்டம்
எனைக் கரையேற விடுவதில்லை!
இரவானால் என்னோடு
உறவு கொள்ள யாருமில்லை!
தனிமையிலே தவிக்கின்றேன்
இனிமையின்றிக் கிடக்கின்றேன்!
சந்திரன் வரவு கண்டு மலரும்
அல்லி கூட
ஏறெடுத்துப் பார்ப்பதில்லை
என் திறத்தை ஏற்பதில்லை!
ஞாயிற்றின் வரவுக்குப் பின்னே
எனை நாடி வரும் உறவுக்காக
ஆசையுடன் காத்திருக்கிறேன்!.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
