கால வெள்ளத்தில் மிதக்கும்
காற்றடைத்த பந்தாய் மனித வாழ்வு
பாதை ஏதும் அறியாது
பயணம் அது தொடருது
கரை ஒதுங்கும் நேரம்
பயணம் அது முடியும்
அலை விட்டு அலை
தறிகெட்டு ஓடும்
எதிர் காத்து வந்தால்
பயணத்திசை அது மாறும்
காற்றோடும் கரையோடும்
உறவாடும் சில நேரம்
ஆற்றில் வெள்ளம்
அதிகமானால் பந்தின்
உயரம் கூடும்
தண்ணீரில் தத்தளிக்கும்
சிறு பூச்சி பந்தில் ஏறி
பயணமாகும்
தந்தி தாவும் தட்டானும்
பந்தில் கொஞ்சம்
இளைப்பாறும்
பந்தின் பயணம்
பந்துக்கு எங்கு புரியும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)