படம் பார்த்து கவி: குப்பையாக பார்த்தால் குப்பை

by admin 3
79 views

தோற்றுப் போன காதலில்
எவ்வளவு உயிர் இருந்ததென்பதை
என் கவிதை மூலம் ஜெயித்த
பல காதல் கதைகள் சொல்லும்
நீங்கள் கிண்டலடிப்பதற்கும்
நேரம் பொழுது போக்குவதற்கும்
என் கவிதை ஒன்றும் விளையாட்டு கேமெல்லாம் இல்லை
உணர்வும் -உயிரும் இணைந்த உடல் போல
எண்ணமும் -எழுத்தும் நிறைந்த
என் காதலின் பொக்கிஷங்கள்
மொத்தத்தில் என் கவிதைகள் அனைத்துமே
வாழ்க்கையின் கண்ணாடி தான்
நீங்கள் குப்பையாக பார்த்தால் குப்பை
பொக்கிஷமாக பார்த்தால் பொக்கிஷம் !

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!