குப்பையில் கூட தரம் உண்டு!
மக்கும் குப்பை!
மக்கா குப்பை!
காதலுக்கும் தரம் உண்டு!
உயிர் காதல்!
உடல் காதல்!
மக்கும் குப்பைக்கு மதிப்புண்டு!
பணம் கொழிக்கும்
உரமாகும்!
மக்காக் குப்பைக்கும்
திறனுண்டு!
மண்ணையும்,
நீரையும்
விஷமாக்கும்!
உயிர் காதல், பிணத்திற்கும்
மதிப்பளிக்கும்!
உடல் காதல்,
மணத்திற்கும்
மதிப்பிழைக்க வைக்கும்!
என்னெனில்?
உடல் காதல் என்றென்றும்
குப்பைக் காதல்..
சுஜாதா.