குழந்தை செல்வம்
செல்வங்களில் உயர்ந்த செல்வமான குழந்தை செல்வமே எங்கள் உயிர் காதலில் மலர்ந்த என் அழகு செல்வமே…
அம்மா என்ற மகுடத்தினை எனக்கு சூட்ட இவ் வையத்தில் நீயும் அவதரித்தாயே…
உன் பிஞ்சு பாதங்களை தொட்டு முத்தமிடும் போது என் ஐம்புலன்களும் அழிந்து புத்துயிர் பெற்றனவே…
உன்னை அள்ளி எடுத்து கொஞ்சி என் மார்போடு அணைக்கும் பொழுது என் மனமும் மழலையாய் மாறுகின்றதே…
இவ்வையத்தில் கவலையின்றி மானிடன் வாழும் பருவம் கள்ளம் கபடமற்ற பச்சிளம் குழந்தை பருவமே…
மீண்டும் ஒருமுறை குழந்தையாய் மாறி என் தாய் மடியில் நானும் தவழ என் மனமும் ஏங்கித் தவிக்கின்றதே…
✍️ ரஞ்சன் ரனுஜா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)