படம் பார்த்து கவி: கைவிலங்கு

by admin 1
51 views

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே”..என்றார்
புலமை பித்தன்..

ஆம் சூழ்நிலையே ஒருவனின் சகுனி
அது எப்படியும் சூழ்ச்சி செய்யும்
தர்மனையும் சூதாட வைக்கும்…
ஏன் கை விலங்குகளையும் பூட்டி கைதியாகவும் மாற்றும்..

“நாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான்! சிலர் கம்பிகளுக்கு உள்ளே! சிலர் கம்பிகளுக்கு வெளியே!” என்கிறார் கவிஞர் கலீல் ஜிப்ரான்.

கைவிலங்குகள் குற்றவாளிகளின் கைகளை மட்டுமல்ல சில நேரங்களில் குற்றமறியா அப்பாவிகளின் கைகளிலும் தவறுதலாக முத்தமிட தவறுவதில்லை…

வாழ்வில் ஒருமுறையேனும் கருடபுராணம் படித்தால் கைவிலங்குகளே தேவையில்லை…

- ரஞ்சன் ரனுஜா

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!