வெண் நீலவானில்
கலையும் கருமேகமாக
கவலையான மனதை
களையும் இசையாக
காரிகையின் கால் கொலுசு
பாவை உந்தன்
பாதம் தீட்டிய
சிவந்த நலங்கு
ஓவியத்தில் பளிச்சிடும்
முத்தான கால் கொலுசு
கடைக்கண் பார்வை
கார்மேக குழல்
பூவையின் புன்னகை
நாட்டிய நவரசம்
அத்தனை அழகையும்
மிஞ்சி காற்றில்
தவழ்ந்து என்
காத(தி)ல் சொல்லும்
கன்னியவள் கால் கொலுசு
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
