உன் கால் பற்றி மெட்டியிட்டேன்
அதிலிருந்த சித்திரத்தை கண்டேன்
சித்தம் கலங்கி நின்றேன்
கால் அழகா இல்லை
மருதாணி அழகா என்று
உன் கால் சுற்றியிருந்த கொலுசு
கோவித்துக் கொண்டது
என்னைப் பார்க்கவில்லையே என்று
எப்படி சொல்வேன் இனி என்றும்
உன் காலடியில்தான் நான் என்று
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
