சிகப்பு வண்ணத்தில் ஒரு கடிகாரம்,
நேரம் சொல்லும் நம்பகமான தோழன்.
ஒவ்வொரு நொடியும் ஓடுகிறது வாழ்க்கை,
காலத்தின் அருமையை உணர்த்தும் கருவி.
அதிகாலை அலாரமாய் ஒலிக்கும் ஓசை,
புதிய நாளை வரவேற்கும் இனிமையான கீதம்.
கண்களைத் திறந்து உலகைக் காண,
நேரத்தின் மகிமையைச் சொல்லும் பாடம்.
ஊசிகளின் நடனம் வட்டக் களத்தில்,
கடந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும்.
ஒவ்வொரு கணமும் ஒரு பொன்னான விதை,
நேரத்தை விதைத்து வாழ்க்கையைப் பூக்கச் செய்வோம்.!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: சிகப்பு
previous post