சிப்பியின் உள் வயிற்றில் ஆண்டு கணக்கில் கருக்கொண்டது முத்து.
ஜப்பானில் பெண்களும் முத்து குளிப்பார்களாம்.
ஒருவேளை பெண்ணின் கரம் பட்டதால் வெட்கத்தில் மிளிர்கிறதோ இவை.
மூச்சடக்கி
மீட்டு வந்து சிப்பியை சிதைத்து வன்முறையில் முத்தெடுத்தாலும் இன் முகத்தோடு சிரிக்கின்றன.
பாண்டியர் காலம் தொட்டு
மகளிர் கழுத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஆபரணம்.
உண்மையோ போலியோ
அழகாய் அணிவகுப்பதில்
வசீகரிக்கிறது.
-அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
