மண மேடையிலே மணமுடித்த
நொடியிலே இனி காலமெல்லாம்
நம் காதலாய் வந்த காவல் வளையம்
இவள் தான் என மனைவியின்
பாதம் தொட்டு மெட்டியிட்டு
முத்தமிடுகிறான் ஆண் மகன்,;!
உன் பாத அழகில் பாதி
தொலைந்து போனேன்,
உன் கால்களை வருடி
கண்ணை கவரும்
முத்து மணிகளோ மீதி உயிரை
பறித்துக்கொண்டன,
எத்தனை யுகங்கள் பாக்கியம்
செய்தேனோ,
இத்தனை அழகான
வண்ண ஓவியம் தீட்டிய
பாதம் காண,
ரவி வர்மன் ஓவியத்தில்
விடுபட்டன,
உன் பாதம் பட்ட இடமே பளிங்கு
போல் பிரதிபலிக்க,
செக்க சிவந்த வானம் போல்,
மனதை சொக்க வைத்து விட்டது
உன் பாதம்…!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
