செஞ்சுடர் பரிதியாலே
பனி மலை உருகுது
நதியென உருளுது
உருளும் நதியை
ஒளி ஊடுறுவும்
உருளை குடுவையில்
வழுக்கு பாறை மேல்
நிறுத்தி பார்த்தால்
மலையும் மடுவென
பரதியும் பொறியென
குடுவைக்குள் அடங்கும்
மனக்கவலை எனும்
மாமலை
கண்ணீரில் பாதி கரையும்
கண்ணீரில் கரையாமல்
குடுவை தண்ணீரில்
பார்த்தால் மடு வென மாறும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
