செம்பருத்தி பூவின் வாசமும்
சேலை கட்டும் பெண்ணின் நேசமும்
செவ்விதழ் கொண்டவளே
இதயத்தின் ராணியே
உதயத்தில் மலருபவளே
மஞ்சள் பிள்ளையாரின்
உச்சியில் இருந்து
மங்கலம் தருபவளே
மங்கையவளின் பின்னலில்
இருந்து மயக்கம் தருபவளே
மாயக் கிளியே
மயங்கி கிடக்கிறேன்
உன் காலடியில்உன் இதழ் தந்து
என் இதயத்தை காத்திடு
அருள்மொழி மணவாளன்