அழுக்கு செவியில்
ஆர்வமாக நுழைந்து
இம்சை தந்ததை நீக்க
ஈரெழுத்து பொருளாக
உதவியது பின்
ஊக்கு என்பர் தமிழில்
எல்லோரும் பயன்படுத்தி
ஏற்றம் பெற்றாலும்
ஐயம் சிறிதுமின்றி
ஒரு முறை செவியில்
ஓங்காமல் மெதுவாக
ஔடதமாக செலுத்தும்
அஃத்தின் பெயர்
செவியின் உட்புறத்தை
தாவி சுத்தம்
செய்யும் மாப் …..
பயன்படுத்த எளிது
பக்க விளைவு இல்லாதது
நீ இன்று என்
செவிகளை பராமரிக்க
உதவுவதால் உற்ற
தோழியானாய்…..
உஷா முத்துராமன்