தங்கப்பாதங்களுக்கு
வெள்ளிக் கொலுசோடு
முத்துக்கள் இணை சேர
மருதாணியின் இளஞ் சிவப்பு துணை சேர
அழகு பதுமையவள்
மென் பாதம் ஆரத்தியில்
வலது கால் பதித்து
இல்லத்தினுள் தடம்
பதித்து
மறு வீடு செல்ல
உடன் மகாலட்சுமி
துணை வர
செல்வமும் செழிப்பும்
நிறைந்து மறு வீட்டில்
ஆனந்தம் பொங்கிட
வாழ்வு வளமாகும்
வசந்தங்கள் வந்து சேறும்.
அமிர்தம் ரமேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
