- தனிமையில் ஒரு இனிமை *
ஆளில்லா நீரோடையில்
துடுப்பு கூட துணையின்றி,
தனிமையில் எங்கு
செல்கிறாய் ஓடமே,!
ஒய்யாரமாய் அமர்ந்து செல்லும் உன்னில் எவரும் துணையின்றி
துக்கம் தாழாமல் தனிமையை
தேடி ஓடுகிறாயா ஓடமே,!
மலைகளை இடைவிடாது
கட்டியனைத்து செல்லும்
வாண் மேகங்களே மலைகளின் மீது
இத்தனை காதலா,!
வியந்து பார்க்க வைக்கும்
விண்ணை தொடும் சிகரங்கள்
பச்சை வண்ண பட்டாடை கட்டி
மேகத்துடன் மோகத்தில்
உறவாடும் உள்ளார்ந்த
காதலை கொட்டி தீர்க்கின்றனவோ,!
இயற்கை அன்னையே இன்னும்
எத்தனை எத்தனை
அதிசயங்களை உன்னுள்
ஒளித்து வைத்திருக்கிறாய் ….!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)