தனிமை
தனிமை வரமா? சாபமா? நெடுநாட்களாக விடை காண முடியாத புதிர்..
அவரவர் எண்ண அலைகளின் ஓட்டமே அதன் தீர்மானம்…
தனிமையில் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடித்தவர்கள் ஏராளம் இப் பாரினில்…
இன்று நீயும் கூட தனித்து இருப்பதானால் தான் என்னவோ…
இந்த வனாந்தரத்தில்
தனது மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்
இந்த வயோதிப மரத்தின் மீது
ஏறி அதன் கிளையினை அடைந்து
அமைதியாய் அமர்ந்து மேதினியின் அழகை தனிமையில் இரசிக்கின்றாய் போலும்…
உன்னை பார்த்து கற்றுக் கொண்டேன் தனிமை சாபமல்ல இறைவனால் அருளப்பட்ட வரம் என்று.… -ரஞ்சன் ரனுஜா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
