உன்னைப் பற்றி
தேடினேன் வந்தது
தேடு பொறியில்
பூக்கோசு எனும்
ப்ராக்கோலியே
உன் தலைப்பூ
எங்கள் உணவு
முட்டைக்கோசு
காலிபிளவர்
தூரத்து உறவுகள்
இத்தாலி தாயகம்
இந்தியா புகுந்தகம்
நலம் பல தரும்
சமையலறை ராணி
பசுமையைக் கண்டு
சூடிக்கொள்ளட்டுமா
என்கிறாள் என்னவள்.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
