தாகம் தீர்க்க தண்ணீர் குட்டை தேடிய மான் கூட்டங்கள் போல வெளி சென்று வீட்டிற்குள் நுழையும்போது உன்னைக் கண்டால் அறியா களிப்பை தருகிறாயே உன் மென்மையான தோல்களால்… நீ என்ன குழந்தையின் விளையாட்டுப் பொருளா ???
உன் தீண்டல் பட்டால் சிறிது நேரத்தில் உறக்கம் கொள்ள வைக்கிறாயே..நீ என்ன மயக்கும் மருந்தா ???
உன்னை முகப்பு அறையில் வைக்கிறோம் நீ அந்த அறைக்கே அழகு சேர்க்கிறாயே…. நீ எந்த நாட்டு அழகியோ…???
- சுபாஷ் மணியன்(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
