தினம்,தினம்
மனம் கவி பாடியது
ஏனோ
கனவில் வந்த
பென்குயின் ஒன்று
கவிதையெழுத
உனக்கான கருப்பொருளை
தரமாட்டேன் என்றது
கவிதைகளோடு வாழ்பவனுக்கு
கருப்பொருள் எதற்க்கு?
உதித்து மறையும்
சூரியனை போல்
மனித வாழ்வும்
தினம்,தினம் மாறும்.
தனமே நிரந்தரமில்லாதது அதை தேடி
இயந்திர வனத்தில்
மனம் ஓட வில்லையா என்ன?
ஏமாற்றங்கள் தான்
எள்ளளவும்
அடுத்தவர்களுக்கு செய்ய கூடாது
நியாயமான மாற்றங்கள்
வாழ்வுக்கு அத்தியாவசியம் தான்
கடைசியாய் ஒன்றே ஒன்றை
புரிந்து கொள்
மாற்றம் ஒன்றே மாறாதது!
லி.நௌஷாத் கான்