இன்றைய நவீன யுகத்தில்
ரொட்டியும் வேகாத முட்டையும்
எந்நேர உணவாகவும்
புசிக்கும் அன்னத்தில்
முதன்மையாய் இருக்கிறது…
ஊனெங்கும் கொழுப்பு
செழித்து வளர்ந்து
குருதி இனிப்பையும்
குருதி அழுத்தத்தையும்
பரிசளித்து – இதயத்திற்கு
பணி ஓய்வு கொடுக்கும்…
எளிதில் செரிமானமாகும்
உண்டி புசித்து வாழ்..
நாவின் ருசிக்கு மயங்காதே..
வயற்று பசிக்கு ஆகாரமிடு..
ஆரோக்கியமான உடலுக்கு
சரிவிகித உணவு..
வலிமை தரும்
பாரம்பரிய உணவை
உண்டு நீண்ட நாள் வாழ்..
துரித உணவை புசித்து
துரித மரணத்தை தழுவாதே…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
