நட்சத்திர உயிரே!!
முத்து தீவின்
ஆழ் நிறை வாழ் அழகே!
செந்நிற ஒளியே
பாறை முட்தோலி வகையே..
ஐக்கோண வடிவழகே!!
வானழகை நட்சத்திரம் மிஞ்ச
ஆழி சூழ் அழகை நீ மிஞ்ச
ஆராதிக்கிறேன் ரசிக்கிறேன்
இயற்கை உன்னில் துளைத்தழகைக் கண்டு..!!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
