தலைப்பு : நட்சத்திர அழகி
விண்ணின் நட்சத்திரக் கூட்டத்திற்கு,
இணையாக ஆழியின் அழகி இவளே!
வானவில்லின் வர்ண ஜாலங்களை அள்ளித்தெளிக்கும் அழகிகளை, தன்னுள் கொண்டுள்ளானே இந்த சாகரன்.
இப்புவுலகின் முழுமுதல் கடவுள் ஐந்து கரத்தனே !
ஆழ் கடலினை முழுமையாக்குபவளும் இந்த ஐந்து கரத்தவளே!
மெல்லுடலியான இவளின் சிரசு எங்கே?
பளபளக்கும்
மேனியாளிவளின்
கால்கள் எங்கே?
எது இல்லாவிடினும் இவளின் அழகிற்கு குறைவேது?
சாகரன் பொத்தி பாதுகாத்து தன்னுள்ளே பொதிந்துள்ளான் இவளை!
தரையோடு தரையாக நகர்ந்தாலும் தன்னிகரில்லா அழகி இவளே!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
