நான் சைவம் என்றான்
நான் உயிர்களை நேசிப்பவன் என்றான்.
நான் மிருகங்களை வதைக்காதவன் என்றான்.
உயிரை கொன்று தின்பது நியாயமா என்றா….
மசாலா தடவி
மொறுகலாக சுடப்பட்ட
கோழி என் தட்டில் விழும் வரை.
மனிதனின் ஆதி உணவு மாமிசமாமே…
உணவுச் சங்கிலி அறுபட்டால் ஆபத்தாமே
தாவர உண்ணிகளை அனைத்துண்ணி சாப்பிடுவது தவறில்லையே
என்றவாறு ஒரு துளி பிய்த்து சுவைத்தவன் சொன்னான்…
“என்ன இருந்தாலும்
அம்மா அடிச்சு செய்ற
நாட்டுக்கோழி டேஸ்ட் வரல”
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
