நாம் நடக்கும்
பாதையில்
பள்ளம்
மேடு
இருக்கலாம்
இங்கு பாதையே
பிளந்து
கிடக்கிறதே
இப்பாதையை கடக்க
கடவுள் வந்து வழி செய்து கொடுப்பாரா?
பிளந்தபாதையை
எம்மால் ஒழுங்கு
அமைக்கதான்
முடியுமா
நாம் எப்படி
பயணத்தை
தொடர்வது
இதற்கு என்னவழி
மதி வழியே
மனதை செழுத்தி
சதியெனும் வம்பை
நீக்கி
எம் விதியை
வெற்றி கொள்வதே
இப்பாதையை கடக்க
ஒரு வழி
M. W Kandeeepan✍️
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)