பிறப்பு இறப்பின் இடையே ஆடும் ஆட்டம் ஒய்ந்த பின்
எஞ்சி நிற்கும் அடையாளம்….
காய் கனிகள் மலர்கள் சொரிந்து
இயற்கை பேணும் மரங்கள்…. எரிக்கப்பட்டால் வெந்தபின் மீந்த
மரங்களின் எலும்புகள்….
மண்ணுக்குள் புதைந்து பொறுமை காத்தால்… வைரமாய் மின்னும் கருப்புப் பொக்கிஷம்…
உணவாக்க உதவுகிறாய்… ரயில்
ஊர்தி இயக்க உதவுகிறாய்..
இன்றைய வேக உலகிற்கு.. அன்றே
ஆதி மனிதன் நீ…
S. முத்துக்குமார்