நிலவின் மொத்த அழகையும்
பரிதி தன்னொளியில்
மறைத்து வைக்க
மெல்ல மெல்ல விடியல்
வெளிச்சக் கீற்றுகளாக
தரணியெங்கும் நிறைத்திட
என் இறைவியின்
வருகைக்காக நானோ காத்திருந்தேன்…
முத்தமிட்டு தழுவியிருக்கும் மூக்குத்தி..
புதைகுழியென கன்னங்குழிகள்..
ரோஜா நிற செவ்விதழ்கள்..
மயிலிறகின் மென்மை தேகத்தில்
மலர்வாசனை கொண்ட
தங்க மேனியை ஆடையால்
மறைத்து பாதுகாக்கிறாள் தங்கதாரகை..
நான் மட்டும் விதிவிலக்கு..
ஆம்…,
அவளின் நீராடல் பேழையில்
அவளோடு நீராடுவதற்கே
அனுதின காலைவேளை வருமட்டும்
நேரம் நகராமல் தரும் பெரும் அவஸ்தை இந்த காத்திருத்தலே…
அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)