நெருங்கி விலகி
விலகி நெருங்கி
விளையாடும்
வின்வெளி நட்சத்திரங்களை
விண்னுக்கு வழங்கிய
இறைவனே
ஏன் எனக்கு தரமறுத்தாய் என
கண்ணீர் மல்கி
கடல்தாய் கேட்க
இறைவனால்
படைக்கப்பட்ட
நட்சத்திர மீனே
உடல்பாகங்கள்
இழக்க இழக்க
மீளபொருத்தி
உன்னை
அழகாய் வைத்துக்கொள்ளும்
உயிரே
விண்மீன்
எரிந்தால் எரிகற்கள்
நீ இறந்தால் இளம்
பூக்கள்
எதிலும் இனையா
இரு துருவம்
படைத்தது மட்டும்
ஒரே உருவம்
நட்சத்திர மீன்
என்றால்
வானில் ஒளிரவேண்டும்
மிளிரவேண்டும்
நீயோ ரத்த சிவப்பாய்
சுடுமண்ணில்தானே
உழல்கின்றாய்
குழந்தை களின்
உள்ளம் கவர்ந்த கள்வனே
இறைவனின்
அற்புத படைப்பே…
M. W Kandeepan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
