ஒப்பனைகளை
களைந்து விட்டு
கண்ணாடி முன்
நின்றாள் காரிகை..
அருகிலோ நான்..
அவளின் குளிர் பார்வை
உயிருக்குள் ஊசியாக இறங்கிட
அவளின் பட்டு மேனியை
அள்ளி அணைத்திட தான்
இளமையின் நெஞ்சம் ஏங்கியது..
‘எப்படியடி இப்படி மினுமினுக்கிறாய்?’
என்று வினவினேன்..
ஒரு மலரை உண்கிறேன்
என்று புன்னகை உதிர்த்தாள்..
அவளின் மொத்த அழகும்
அந்த புன்சிரிப்பில்..
அழகின் ரகசிய உணவு
இதயத்தின் இதயப்பூ
இளமையின் செல்வ மலர்
பச்சை பூக்கோசு…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
