படர்ந்து விரிந்து ஓடும் நதியையும்
அடர்ந்த காட்டையும்
உயர்ந்த பனி மலையையும்
விரிந்த வானத்தையும் ஏன்?
சுட்டெரிக்கும் சூரியனை கூட
தன்னுள் அடக்கி
அமைதியாய் வீற்றிருக்கும்
கண்ணாடி குடுவை
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
