பத்து மாதம் சுமந்தாள்
பத்தியம் இருந்தாள்
பல வலிகளை பொறுத்து கொண்டு
பெற்றெடுத்தாள்
பால் கொடுத்தாள்
தாலாட்டினாள்
கழிவுகளை அகற்றி
சுத்தப்படுத்தினாள்
எல்லாம் எனக்காக செய்த
மனித தெய்வம் அவள்
நுரைக்கும் நினைவுகளாய்
மணக்கும் சோப்பின்
நீங்காத வாசனையாய்
அடி நெஞ்சில்
அழியாத கோலமாய்
அன்னையவள்
ஆன்மாவில் கலந்திருக்கிறாள்!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
