பயணம் செய்யும் பாதையிலே
பள்ளம் ஒன்று கண்டேன்
நித்தம் தன் வழி தடம் மாற்றும்
வெள்ளம் என்று கொண்டேன்
பாதை மாறிய பயணத்தால்
பிளவு பட்ட என் வாழ்வில்
யார் வந்து தார் ஊற்றி
சீர் செய்ய போவது
தேர் ஓடும் பாதையாய்
அதை மாற்ற போவது
பாதை மாறிய பயணம்
என்றும் ஊர் செல்வதில்லை
ஊர் சொல்லும் பாதையில்
நாம் செல்வதில்லை!!
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
