- பாட்டில் பனி மலை *
பசுமை நிறைந்த பறந்து விரிந்த
நிலத்தில் பனி மலைகளுக்கு
மத்தியில் கள்ளம் கபடமின்றி
கரடுமுரடான வழியில் ஓய்வின்றி ஒடும் நதியில் ஓர் உல்லாச பயணத்தின் இடையில்
நீர் அருந்திய பாட்டில்
நிதானமாய் நிற்க்க,!
கதிரவனிமிருந்து
காத்து கொள்ள பனி மலைகள்
பாடிலுக்குள் படையெடுத்தன.;!
கதிரவனை கண்டு கண் கலங்கி
சிகரமாய் உயர்ந்து நிற்கும்
பனி மலைகளும் நதி வழியே
நடை பயணம் மேற்கொள்ள,;
விடாமல் துரத்திய கதிரவனையும்
கண்ணாடி பாட்டிலுக்குள்
கற்களுக்கு இடையில்
சிறைப்பிடித்து அடைத்து விட்டன… ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)