படம் பார்த்து கவி: பாத தரிசனம்

by admin 1
68 views
  • பாத தரிசனம் *
    செந்தாமரை இதழாய்
    பாத தரிசனம் கண்டு
    பிறவிப் பயன்
    அடைந்துவிட்டேன்,;
    என் நாடி துடிப்பில்,
    உன் இதய துடிப்பு
    தொடங்கிய நிமிடம் முதல்
    உனை உயிருக்குள் அடைகாத்து;
    உனை ஈன்றெடுக்கவே இப்பிறவி
    எடுத்த அர்த்தம் உணர்ந்தேன்;
    ஒரு பிறவியில் மறு ஜென்மத்தை
    உன் பிறப்பில் உணர்ந்தேன்;
    உலகே வியந்து பார்க்க இருக்கும்
    உன் பாதங்களின் முதல்
    நடைமேடை என் இதழ்களே,,!
    கடவுளை உணர்ந்தவர்
    பலர் இருப்பின்,
    கண்ணால் கண்ட பாக்கியம்
    உன் பாத தரிசனம் எனக்கு
    கிடைத்த நிமிடம்,!
    இப்பிறவி பலன் அடைந்த
    முழு மனதுடன்…!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!