வறண்ட பாலை
வரைந்த கோடுகள்
புவியின் முதிர்ந்த
முகச் சுருக்கத்தால்
தேய்ந்த முதுமையின் சாயல்
ஆதவனின் உக்கிரம்
அந்திவானில் மறைய
தாகம் தணிய
தண்ணீரைத் தேடிய
குடிநீர் குழாய்க்குள் காற்று
தாங்க முடியா
தாகத்தில் தண்ணீருக்காக
காத்திருக்கும் பாவப்பட்ட
வறண்ட பாலையான நான்….
என்றோ ஒருநாள்
வான்மகளின் வருகையில்…..
வசந்தமில்லாப் பாலை
வண்ணமலர் பூக்கும்
சோலையாவது உறுதி
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
