பாலைவனச்சோலை
மாடி வீடு கட்டணும்னு
மனக்கோட்டை கட்டி
மணல் நகரம் வந்தேனடி
ராணி போல வாழவைக்க
ராசாத்திக்காக வந்தேனடி
அடுக்கு மாடி கட்டிடம் தான்
அடிக்கும் வெய்யுளுக்கு மின்னுதுங்க
அடுக்கு மாடி கட்டிலில் தான்
எங்க வாழ்க்கை போகுதுங்க
ஒத்த ரொட்டி கொடுத்துப்புட்டு
ஒட்டகத்தை மேய்க்க சொல்லுறான்
சூடு மணல் காற்றினிலே
எந்தன் இளமை கருகுதடி
தண்ணி புட்டியிலே குடிச்சாலும்
ஓடுற தாமிரபரணி போல வருமா
வருஷம் தான் போகுதடி
வயசும் தான் கூடுதடி
கடனும் தான் அடையலை
கடமைதான் முடியலை
வாயை கட்டி சேர்க்குறேன்
ராசாத்தி உனக்காக தானடி !
சீக்கிரமா வந்துடுறேன்
காதலோடு காத்திரு ராசாத்தி
அன்பை கொட்டி தீர்க்க தான்
ஆசையோடு மச்சான் வருவேன் !
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)