பிரட் ஆம்லெட்டே நீ யார்?
மேலை நாட்டினின்று தடம்
பரப்ப வந்தாயா?
மேல்தட்டு வர்க்கத்தின்
மேலான. ஆதிக்க நாயகியா?
கீழ்த்தட்டு வர்க்கத்தின்
கிட்டா சொப்பன சுந்தரியா?
மாவுச்சத்து நிறைந்ததால்
மதுமேக நோயாளியை
அச்சுறுத்தும் அழகியா?
நார்,புரதம் நிறைந்ததால்
உடற் பயிற்சி செய்வோருக்கு
உற்ற தோழியா?
நீ யாராகிலும் சரி!……நாமோ
யாக்கையை வளர்த்தெடுக்க
காக்கையாய் மாறிவிட்டோம்!
காணாததையும் கண்டதையும்
கண்ட நேரத்தில் உண்டு,
கணிணியும் கைப்பேசியுமாக
காலத்தையும் ஆரோக்கியத்தையும்,
தொலைத்து வருகிறோம்…
காலங்கள் நழுவிச்செல்ல
பயணம் மட்டுமே பயணிக்கிறது
பார்த்திராத மரணச்சுவடுகள் தேடி!.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)படம் பார்த்து கவி:
