பிறந்த சிசுவின் மேனி
கொண்ட பாதங்களில்
மருதாணி தன் ரத்தநாளங்களை அரைத்து குருதி கொடை கொடுத்து சிவப்பு
கம்பளம் விரித்து …
முத்துக்கள் மொத்தமாய் கணுக்காலில் புடை சூழ …
ஸ்வரங்கள் அனைத்தும் கொலுசு மணிகளில் தஞ்சம் புகுந்து கொள்ள …
ஜதிகொண்ட நளினத்தில்
அவள் நடைபயில …
அத்தனை ஜீவன்களும்
அவளைப் பார்த்து
மோட்சம் பெறும் .
மலையரசன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
