தலைப்பு: புகைப்படம் எனும் பொக்கிஷம்
என் நினைவலைகளை மீட்டும் வல்லமை உன்னாலே மட்டும் முடியும்!
என் சிறுவயது ஞாபகங்கள் உன்னுள் புதைந்துள்ளது!
கடந்த பாதையின்
அழகிய தருணமானாலும்,
மறக்கத் துடிக்கின்ற நினைவுகளானாலும் புகைப்படக் கருவியான உன்னாலே மட்டுமே
மீட்டெடுக்க முடியும்.
நவீன வளர்ச்சியின்
மிக அற்புதமான படைப்பு நீயே, என் புகைப்படக் கருவியே….
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
