புகைவண்டி
குபுகுபுவெனப் புகை
கக்கும் புகைவண்டி
தூரமாக துரிதமாக
அருகில் வர
ஜன்னலோர இருக்கையில்
ஆனந்தமாய் அமர்ந்தபடி
சந்தோஷப் பயணம்
வான்மேகத்தில் ஒளிரும்
விண்மீன் கூட்டமும்
பச்சைப் புல்வெளியும்
மரங்களடர்ந்த வனமும்
சோலை மலர்களும்
பற்பல நிலையங்கள்
கடந்து பாங்குடனே
நின்று பிரியாவிடை
கொடுக்கும் தோழியவள்
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)