புன்னகை செய்
ஒரு புகைப்படம்
கேமரா கண்களால்
ஞாபகர்த்தமாய் எடுத்து வைத்து கொள்கிறேன்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுயென்று
ஊரில் ஒரு பழமொழியுண்டு
கோபம் பட்டால்
அழகு வேறு குறைந்திடுமாம்
யார் என்ன சொன்னால் என்ன?
என் 5G பேரறிவே
கொக்கரிப்போடு
கோபப்பட்டாலும்
நீ பேரழகிதான்!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
