அசைந்தாடி நீ
நடக்கையில் உன்
மீது பாசம்
வந்து விடுகிறது…
தூரத்தில் நின்று நீ
பார்க்கையில்
நட்புக்கரம்
நீள்கிறது….
ஜோடிகளாய்
உலா வருகையில்
உவகையாகிறது…
நீ விலங்காக
நடக்கிறாய் தத்தி…
பனிக்கட்டியில்
வயிற்றால் எக்கி
கடந்து விடுகிறாய்..
நீரிலோ உன் இறகு
துடுப்பாகி விடுகிறது…!
பனிப் பிரதேச
விசுவாசியே…
நீரில் சாகசம்
புரியும்
மாசில்லா ஜீவனே
உன்னை நான்
நேசிக்கிறேன்…
S. முத்துக்குமார்
