பொற்றாமரைப் பாதம்
பூமியில் பட்ட நேரம்
எட்டாண்டு காலம்
நான் பட்ட இன்னல் தீரும்
இல்லை ஒரு பிள்ளை என்று
எள்ளி நகை யாடியவரும்
இனி ஏளன பேச்சுக்கு
யாரைத்தான் தேடுவரோ?
பிள்ளை பேறு பெறுவது
உலக மகா சாதனையாய்
ஆனதன் காரணம் ஏதும்
நானறியேன்
மகரந்தச்சேர்க்கை யாலே
மானுடம் தலைத்ததெல்லாம்
மருந்தால் ஆனதனால்
பொற் தாமரை மலர
எட்டாண்டு ஆனதுவோ?
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
