கோதுமை வண்ண திருவோட்டில்
வெள்ளை படுக்கையில்
மஞ்சள் ராணி
ஒய்யாரமாக
சிவப்பு சிங்காரி
வெண்ணெய் சகிதம்
சகல அலங்காரத்துடன்
கர்வமாய் மினுமினுக்கிறாள்..
அடுத்த நொடி பற்களில்
தன் அலங்காரத்தை
இழக்க போவதை மறந்து…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
